மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்ததை எதிர்த்து
கோவை மாவட்டம்
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை இருளர் பழங்குடி மக்கள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கம் ஆகியவை இணைந்து, பழங்குடி மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தின.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தவர் ம. ரங்கசாமி.
வரவேற்புரையை தோழர் கு. வீரப்பன் வழங்கினார்.
துவக்க உரையை சிபிஎம் தாலுக்கா செயலாளர் கே. கனகராஜ் வழங்கினார்.
கோரிக்கைகளை விளக்கி பேசியவர்கள்:
ப. கருப்புசாமி, மலைவாழ் மக்கள் சங்கம் கோவை மாவட்ட செயலாளர்
சந்திரன், மாவட்ட குழு
தொல்குடிமைந்தன், விசிக பொறுப்பாளர்
கோபாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி
ஆர். சுரேஷ், விச பொறுப்பாளர்
சிறப்புரையாற்றியவர்வி. ஆர். பழனிசாமி, விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பழங்குடி மக்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர்











Leave a Reply