பேரணாம்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் குடியிருப்புவாசிகளுக்கு இடையூறாக செயல்படும் கோபி, வஜ்ஜிரம் தொழிற்சாலைக்கு  தடை வருமா?

வேலூர், டிச.2-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு 3-வது வார்டு எம்.ஜி.ஆர்.நகர், கே.கே.நகர், ஜெ. ஜெ.நகர் போன்ற பகுதிகளில் 5000-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளையொட்டி துரைசாமி என்பவருக்குச் சொந்தமான கோபி, வஜ்ஜிரம் தொழிற்சாலை  ஒன்று இயங்கி வருகிறது. இந்த வஜ்ஜிரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து மாசு கலந்த புகை அதாவது வஜ்ஜிரம் தயாரிப்பதற்கான அடுப்பை விறகினால்தான் எரியவிட வேண்டும் என்பது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டம். ஆனால் விறகுக்கு பதிலாக இந்த வஜ்ஜிரம் தொழிற்சாலையில் மாட்டுக் கழிவுகளான சூறா, ஜவ்வு போன்ற கழிவுப் பொருட்களை எரியவிடுவதால் காற்றில் மாசு கலந்த புகை வெளியேறுகிறது. பெயரளவில் அல்லது பார்வைக்கு கொஞ்சம் விறகை வாங்கி வந்து களத்தில் கொட்டிவிட்டு விறகை எரிய விடாமல், மாட்டுக் கழிவுகளை எரியவிடுகின்றனர் இந்த நாசகார தொழிலதிபர். பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் துளி கூட மனதில் இல்லாமல் அரக்கத்தனமாக பொதுநலம் கருதாமல் சுயநலத்துடன் செயல்படுகிறார் துரைசாமி என்று சொன்னால் அது மிகையாகாது .இதனால் மாசு கலந்த புகை வெளியேறி இப்பகுதி மக்களை நிம்மதியாக தூங்கவிடாமல் அவர்களின் நிம்மதியை வாழ்வாதாரத்தை கெடுக்கிறது. குடியிருப்பு வாசிகள் ஒருபக்கம் இருந்தால், அரசு ஆதி திராவிட நல உயர்நிலைப் பள்ளிக்கு மிக அருகிலேயே இந்த வஜ்ஜிரம் தொழிற்சாலை இயங்குவதால் மாணவ, மாணவிகளுக்கும் இந்த வஜ்ஜிரம் தொழிற்சாலை ஒரு நிரந்நர தொல்லையாக மாறி செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து பேரணாம்பட்டு எம்.ஜி.ஆர்.நகர், கே.கே.நகர் பகுதிகளைச் சேர்ந்த கர்ணன், பாண்டியன், ராஜேந்திரன், ரமேஷ், சக்திவேல், ரத்தினவேல், மணி, சாலமன் மற்றும் இந்த வஜ்ஜிரம் தொழிற்சாலைக்கு அருகிலேயே இயங்கிவரும் மாரநாதா திருச்சபைக்கு வருகை தரும் சகோதர, சகோதரிகளும் இந்த வஜ்ஜிரம் தொழிற்சாலை எங்களுக்கெல்லாம் மிகவும் தொல்லையாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர். இதற்கு தடைவிதிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் நேரில் வந்து கள ஆய்வு செய்ய வேண்டுமென்றும், எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வஜ்ஜிரம் தொழிற்சாலையிலிருந்து அவ்வப்போது சுத்திகரிக்கப்படாத வஜ்ஜிரம் கழிவுநீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், குடிநீர் கிணறுகளெல்லாம் உப்புநீர் சுவை கொண்டு உவர்ப்பு நீர் கிணறுகளாக மாறிவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் தரப்பிலும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் கடுமையான புகார்கள் கூறப்படுகிறது.  எனவே, இதுபோன்ற வஜ்ஜிரம் தொழிற்சாலைகள்  மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு கை நிறைய லஞ்சத்தை வாரிக் கொடுப்பதாகக்  பொதுமக்கள் தரப்பில் குற்றஞ் சாட்டப்படுகிறது. தொழிற்சாலை தரப்பில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதற்கெல்லாம் ஆசைப்படாமல் எதற்கும் அடிமையாகாமல் குடியிருப்பு வாசிகள் மற்றும் மாணவ, மாணவிகள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த வஜ்ஜிரம் தொழிற்சாலைக்கு நிரந்தர தடை விதிக்க சம்மந்தப்பட்ட, மாசு கட்டுப்பாட்டு  அலுவலர்கள் சட்டரீதியாக, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே இப்பகுதி பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பாக மாறியுள்ளது. பொதுமக்களுக்காக இந்த தொழிற்சாலை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படுமா? அல்லது கண்டும் காணாமல் விட்டுவிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் வழக்கம்போல் நடந்து கொள்வார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.