வேலூர்,டிச.1-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா பல்லலகுப்பம் கிராமத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் விற்பனையாளராக மோனிஷா என்பவர் இருந்து வருகிறார் .இந்த ரேஷன் கடையில் கிட்டத்தட்ட 900 குடும்ப அட்டைகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் போது ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரை எடை குறைவாக வழங்குவதாகவும் இப்பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு, தரமற்றஅரிசி, பருப்பு போன்ற பொருட்களை வழங்குவதாகவும், தன்னுடைய சாதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கும், வசதி படைத்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதாகவும் விற்பனையாளர் மோனிஷா மீது பல்லலகுப்பம் பகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் அடுக்கடுக்கான புகார்களை கூறுகின்றனர். மேலும் பல்லலகுப்பம் கிராமத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு சென்று விட்டதால் அந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு சேர வேண்டிய ரேஷன் பொருட்களை பல்வேறு தில்லுமுல்லு வேலைகளை செய்து விற்பனையாளர் மோனிஷா கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இப்படி மோனிஷா அடிக்கும் பகல் கொள்ளையில் பாதிபாபங்கு கூட்டுறவு சார்பதிவாளர் கார்த்திகேயனுக்குச் சென்று சேர்வதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பல்லலகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் என். கஜேந்திரன் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இதுகுறித்த தகவல் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமியின் கவனத்திற்கு சென்றது. இதையறிந்த கலெக்டர் சுப்புலட்சுமி விற்பனையாளர் மோனிஷாவின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர் உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகியும் இன்று வரையிலும் விற்பனையாளர் மோனிஷா மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமியின் உத்தரவை கூட்டுறவு சார்பதிவாளர் கார்த்தி (எ) கார்த்திகேயன் தொடர்ந்து அவமதிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பாமர மக்கள் ரத்தத்தை உறிஞ்சி கொள்ளையடிக்கும் பணத்தில் விற்பனையாளர் மோனிஷாவும், கூட்டுறவு சார்பதிவாளர் கார்த்தியும், தாங்களும் பசியாறி கொண்டு தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் பசியையும் ஆற்றுகிறார்கள் என்று இப்பகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த கேவலமான செயல்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர் தனலட்சுமி துணை போவதாகவும் இப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே இது குறித்து மீண்டும் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி நேரில் ஆய்வு செய்து விற்பனையாளர் மோனிஷா மீதும், கூட்டுறவு சார்பதிவாளர் கார்த்தியின் மீதும் தக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி குடும்ப அட்டைதாரர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.











Leave a Reply