பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: காமுகனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

நவ. 29 –
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அப்போது தனது காதலுடன் இருந்தபோது பிரதாப் (34 )என்பவர் காதல் ஜோடிகளை ரகசியமாக தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டார். பின்னர் சிறுமியிடம் அந்த புகைப்படத்தை காண்பித்து மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதைப் பார்த்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து  சிறுமியின் தந்தை குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . இதையடுத்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக பிரதாப் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதாப்புக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.