வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை!

வேலூர், நவ.28-
வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வேலூர் காவல் துறை துணை தலைவர் முனைவர் ஜி. தர்மராஜன் உத்தரவின் பேரில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.மயில்வாகனன் வழிகாட்டுதலின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ். பாஸ்கரன் (தலைமையிடம்) தலைமையில், வேலூர் நேதாஜி ஸ்டேடியம், ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் வைத்து பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. இந்த வாகனங்களை விற்பனை செய்த வகையில் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. 63 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டது. இதில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் மொத்த மதிப்பு ரூபாய் 15 லட்சத்து 20 ஆயிரத்து 448 ஆகும் என்பதை வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.