திமுக இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா!

வேலூர், நவ. 28-
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில்  இளைஞர் அணி செயலாளர் மற்றும்  தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளைஞர்களின் எழுச்சி நாயகன் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட திமுக சார்பில் பொது மக்களுக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் கேக் வெட்டி, திமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட துணை செயலாளர்கள் ஜி. எஸ்.அரசு, பிரதாப்குமார், முன்னாள் எம்எல்ஏ சி.ஞானசேகரன் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி,பேரூர் கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பிரியாணியை வாங்கி உண்டு விட்டு உதயநிதியை மனதார வாழ்த்திவிட்டு சென்றனர்.