பேரணாம்பட்டு நகராட்சி நியமனக்குழு உறுப்பினராக இக்பால் அஹமத் பதவி ஏற்பு!

வேலூர்,நவ.27-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சியில் நகர மன்ற நியமனக்குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளியான இக்பால் அஹமத் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு நகர மன்ற தலைவர் வி. பிரேமா வெற்றிவேல், நகர திமுக செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான ஆழியார் ஜூபேர் அஹமத் மற்றும் ஆழியார் ஹர்ஷத் அஹமத், கோ. சரவணன், வில்லியம் பீட்டர், கிருபாகரதாஸ் உட்பட மற்றும் பலர் வாழ்த்து கூறினர்.