ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி!

வேலூர், நவ.25-
வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு (23. 11.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் மாநில அளவிலான சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் விமரிசையாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்படத்துறையில் சண்டை பயிற்சியாளரும், நடிகருமான கலைமாமணி. ஜாக்குவார் தங்கம் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, வாழ்த்தி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் முனைவர் தங்கக் கோயில் எம் .சுரேஷ் பாபு , ஸ்ரீபுரம் தங்க கோயில் இயக்குநர் மற்றும் அறங்காவலர் இப்போட்டிகளை முன் நின்று நடத்தினார். மேலும் சிறப்பு விருந்தினராக சோனியா டெக்கர் மேன் (யு எஸ் ஏ, நியூயார்க்) கலந்து கொண்டார். இப் போட்டிகளை ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டியில் 700க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து (மாணவ, மாணவிகள்)வருகைதந்து கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற சிலம்ப விளையாட்டில் வெற்றி பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட பரிசுகளை பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பள்ளிகளின் முதல்வர்கள் சுப்பிரமணி, லட்சுமி மற்றும் பள்ளியின் நிர்வாக அலுவலர் ஆதிகேசவன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பள்ளிகளின் துணை முதல்வர்கள், இருபால் ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். பிற்பகல் அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.