மகாகவி பாரதி பூங்கா கட்டும் பணி: திடீர் ஆய்வு  செய்த எம்எல்ஏ!

வேலூர், நவ. 25-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, பள்ளி கொண்டா பேரூராட்சி பகுதியில் புதிய மகாகவி பாரதி பூங்கா கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதை வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன்  பேரூராட்சி செயலாளர் எம்.ஜாகீர் ஹூசேன் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் இருந்தனர்.