வேலூர், நவ.25 –
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 81 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் உடைக்க தகுதியுள்ள நிலையில் உள்ளன. இந்நிலையில் வரும் 26ம் தேதி காலை 9 மணிக்கு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இந்த வாகனங்கள் அனைத்தும் பொது ஏலம் விடப்பட உள்ளன. இந்த பொதுஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் ரூபாய் 100 கட்டணம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம். வாகனங்களை ஏலத்தில் எடுப்பவர்கள் பணத்தை செலுத்தி விட்டு வாகனங்களை கொண்டு செல்லலாம் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வாகனங்களை ஏலத்தில் எடுக்க விருப்பமுள்ளவர்கள் வரும் 26ம் தேதி காலை 9 மணிக்கு வேலூர் நேதாஜி ஸ்டேடியத்திற்கு வருகை தரலாம். இவ்வாறு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பத்திரிக்கை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











Leave a Reply