வேலூர், நவ.24-
வேலூர் பலவன்சாத்துக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கோகுல் பிரசாத் (17). இவர் ஓட்டேரி மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் கடையில் சர்வீஸூக்கு வந்திருந்த ஒரு வண்டிக்கு வாட்டர் வாஷ் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது இதில் மின்சாரம் பாய்ந்தது. இதில் கோகுல் பிரசாத் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கோகுல் பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாகாயம் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.











Leave a Reply