செந்துறை ஊராட்சி ஒன்றியம், மாராக்குறிச்சி அன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மருத்துவ சேவைகள் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார். மேலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 04 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000 மதிப்பில் திருமண உதவிதொகையும், 01 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பில் கல்வி உதவித்தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறன் நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து மாத்திரைகள் அடங்கிய பெட்டகங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, வழங்கினார்.











Leave a Reply