வேலூர், நவ.22 –
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் உட்பட பல அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர். இவர்களுக்கு பல்வேறு விளக்கங்கள் இந்த ஆலோசனை கூட்டம் வாயிலாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.











Leave a Reply