கோவை ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம்!

கோவை சிங்காநல்லூர் கூட்டுறவு பண்டகசாலை சேர்ந்த நியாயவிலைக் கடை  ஹோப் காலேஜ் சாஸ்திரி வீதியில் உள்ளது இந்த கடையில் விற்பனையாளராக கவிதா என்பவர் பணிபுரிந்து வந்தார் இக்கடையில் இவர் பணிக்கு சேர்ந்த நாள் முதலே அரிசி சர்க்கரை கோதுமை உள்ளிட்ட பொருட்கள்   எடை குறைவாகவே வழங்கியதாகும் மின்னணு தராசு தட்டில் எடை கற்களை வைத்து முறைகேடு செய்து வந்ததாக வம் அவ்வப்போது மதியத்திற்கு மேல் கடையை பூட்டி விட்டு செல்வதாகவும் இதனால் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாத திரும்பி செல்வதாகவும் பல நாட்கள் கோதுமை சர்க்கரை ஆகியவை வழங்குவதில்லை என்று இக்கடையை சார்ந்த குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவித்து வந்தனர் இந்நிலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு  செயலாளர் நா லோகுவிடம் புகார் தெரிவித்தனர் அதன் அடிப்படையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நுகர்வோர் அமைப்புகளுடனான கூட்டத்தில் நா லோகு புகார் தெரிவித்தார் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கூட்டுறவு இணை பதிவாளர் விற்பனையாளர் கவிதாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்