வேலூர்,நவ.15-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அல்லாபுரம் பகுதி விருப்பாட்சிபுரம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இந்த பணி எப்படி நடக்கிறது என்பதை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பகுதி செயலாளர் தங்கதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.












Leave a Reply