காட்பாடி அருகே ரயிலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

வேலூர்,நவ.14-
வேலூர் மாவட்டம், சேவூர் ரயில் நிலையத்திற்கும், திருவலம் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் சென்னை மார்க்கமாக செல்லும் ரயிலில் சிக்கி சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.