வேலூர் மாவட்டம்,பேரணாம்பட்டு தாலுக்காவில் மணல் கடத்தல் தொடர் கதையாகி வருவதாகவும் இந்த மணல் கடத்தலை தாசில்தார் ராஜ்குமாரும் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு, சப் இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், கோவிந்தன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக குண்டலப்பள்ளி. சாத்கர், மசிகம், பத்தலப் பல்லி, அழிஞ்சிகுப்பம், எம்.வி.குப்பம், ராஜாக்கல், மேல்பட்டி, ஏரிகுத்தி, மொரசப்பள்ளி போன்ற பகுதிகளில் தினமும் அதிக அளவில் மணல் கடத்தப்படுவதாகவும், இதற்கு கிராம நிர்வாக அலுவலர்களான சிவப்பிரகாசம், அருண்குமார், சேகர், சிவா, யோகானந்தம் ஆகியோர் மணல் கடத்தலுக்கு துணை போவதாகவும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஏரிகுத்தி கிராமத்தில் ஒரு மலையையே குடைந்து கோடிக்கணக்கான ரூபாயில் கட்டுக்கற்களையும், ஜல்லிகளையும் விற்பனை செய்து ஒரு அரசியல் கட்சி பிரமுகர் பணம் சம்பாதித்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு வருவாய் ஆய்வாளர் சரவணனும், ஏரிகுத்தி ஊராட்சியின் (கூடுதல்) கிராம நிர்வாக அலுவலர் சிவா ஆகியோர் தொடர்ந்து துணை போவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே இது குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் இரா. சுப்புலட்சுமியும், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமியும், பேரணாம்பட்டு தாசில்தார் கே. ராஜ்குமாரும், பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபுவும், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசனும் இது குறித்து நேரில் ஆய்வு செய்து சாத்கர் பகுதியில் அதிக அளவில் மணல் கடத்துவதாக கூறப்படும் ஏரிகரைமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன், சாத்கர் பகுதியைச் சேர்ந்த யோவான், குணா, பரமசிவம் ஆகியோர் மீது கூறப்பட்ட புகார்கள் உண்மையென தெரியவரும் பட்சத்தில் மணல் கடத்துபவர்கள் மீதும் அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பேரணாம்பட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.











Leave a Reply