குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 81 இருசக்கர வாகனங்கள் பொதுஏலம்: எஸ் பி அறிவிப்பு!

வேலூர் ,நவ. 21-
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 81 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3, 4 சக்கர வாகனங்கள் உடைக்க தகுதியுள்ள நிலையில் வரும் நவம்பர் 26 ஆம் தேதி காலை 9 மணிக்கு வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலத்தில் ரூபாய் 100 செலுத்தி பங்கேற்கலாம் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார். இந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்பவர்களுக்கு பதிவு எண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாகனங்களை ஏலத்தில் எடுக்கலாம் என்று வேலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.