வேலூர், நவ. 21-
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் ஜி. தர்மராஜன் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் படி, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வேலூர் மாவட்டம், பரதராமி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பரதராமி சோதனைச் சாவடியில் மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த 10 சக்கர கனரக வாகனத்தை மடக்கி சோதனை மேற்கொண்டனர். இதில் சட்டவிரோதமாக விற்பனைக்காக ஆந்திராவில் இருந்து கடத்திக் கொண்டு தமிழக பகுதிக்கு கொண்டுவரப்பட்ட சுமார் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து கஞ்சாவை கடத்தி வந்த மதுரை சஞ்சீவியின் மகன் பாபு (32), சிவகங்கை முனியாண்டி மகன் ராஜ்குமார்( 25) ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து 10 சக்கர கனரக வாகனத்தை பறிமுதல் செய்து 40 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு கொண்டு சென்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். குறிப்பாக இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. இது போன்ற சட்டவிரோதமாக கடத்தி வரப்படும் போதைப் பொருள்கள், கஞ்சா ஆகிய கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும், இதுபோன்ற குற்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும், அப்படி மீறி ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எச்சரித்துள்ளது.











Leave a Reply