காட்பாடிக்கு 2600 டன் உர மூட்டைகள் சரக்கு ரயிலில் வந்தன!

வேலூர், நவ. 21-
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா, காம்ப்ளக்ஸ் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் வகையில் 2600 டன் யூரியா உரம் மூட்டைகள் ரயில் மூலம் காட்பாடிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த உர மூட்டைகள் லாரிகள் வாயிலாக அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது .இதனை ரயில்வே ஊழியர்கள் குட்ஸ் ஷெட்டில் இருந்து பிரித்து அனுப்பும் பணியில் காலை முதல் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.