Archives
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Year:
2026
முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாள் விழா
வெம்பாக்கம் அ.தி.மு.க.,வின் மேற்கு ஒன்றியத்தில் ஜெ.,வின் பிறந்தநாள் விழா : காலை முதல் – இரவு வரை இடைவிடாது அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி !
காட்பாடி தெற்கு பகுதி அதிமுக மற்றும் டாக்டர் அம்மா பேரவை இணைந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்!
காட்பாடியில் ஏடிஎம் மோசடி: முதியவரை ஏமாற்றி ரூ. 20,800 அபேஸ் – மர்ம நபருக்கு போலீஸ் வலை!
பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.,ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா!வேலூர்,பிப்.25-வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ.,ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பேரணாம்பட்டு நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞர் எல். சீனிவாசன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். நகர மாவட்ட அதிமுக நிர்வாகிகள் முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ். சந்திரா சேட்டு, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பி. வாசுகி பாண்டியன், எம். தேசமுத்து, துரை, திருமால், வழக்கறிஞர் ஆர் .ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கும், பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் எஸ். ஆனந்தன், பிஎம்எஸ் சிவக்குமார், பால்காரர் சேகர், பத்திரிக்கையாளர் ராமு, ராஜாமணி, பன்னு ரவி, எஸ் .வி.மனோகரன் ,போன்மில் கண்ணன் ,கே.கார்த்திக் ராஜா, எம். சி .சந்தர், ஜி .எஸ்.கோபி, ஜி .எஸ்.ஜெகன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மரிய ஜோசப் மறைவிற்கு கண்ணீர் ஆஞ்சலி!
“திமுக ஊழல் செய்த பணத்தை கொடுத்து கல்லாப்பெட்டி கூட்டணி அமைத்துள்ளது அறிவாலயம் பக்கம் யார் சென்றாலும் கூட்டணியில் திமுக சேர்த்துகொள்கிறது – நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து கிராமங்களுக்கும் வந்து மக்களை நேரடியாக சந்திப்பேன் – அரசியல் வாதிகள் தாங்கள் சம்பாதித்த பணம் எப்படி வந்தது என வெளியிட தைரியம் உள்ளதாக அகரம்சேரியில் தவெக கூட்டத்தில் – தவெக தலைவர் விஜய் பேச்சு.வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே அகரம்சேரி பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு 23.02.2026 திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகருமான விஜய் கலந்துகொண்டு பேசினார்.இக்கூட்டத்தில் விஜய் பேசுகையில் அறிவாலயம் பக்கம் யார் சென்றாலும், நிழலுக்கு ஒதுங்கினாலும் உடனே திமுக கூட்டணியில் சேர்த்து கொள்கிறது. ஊழல் செய்த பணத்தை கொடுத்து கல்லாப்பெட்டி கூட்டணி அமைத்துள்ளனர்.வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் எல்லா கிராமங்களுக்கும் நேரடியாக சென்று மக்களை சந்திப்பேன். மாபெரும் மக்கள் இயக்கமாக தமிழக வெற்றி கழகம் உள்ளது.வித்தியாசமான விசில் புரட்சி தேர்தல் இது, உங்களுடன் நான் உள்ளேன் மக்கள் உள்ளார்கள் நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.தீய சக்தி ஊழல் சக்தி என யாரை சொல்கிறோம் என மக்களுக்கு தெரியும் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி.அரசியல்வாதிகளை கேட்கிறேன் எவ்வளவு காசு வைத்துள்ளீர்கள் இதையெல்லாம் ஆட்டையை போட்ட காசா என வெளிப்படையாக சொல்ல முடியுமா? இதை எல்லாம் கேட்டால் எங்கள் மீது சேற்றை வாரி வீசுவார்கள்.எனக்கு புதிய நண்பர் கிடைத்துள்ளார் .அது முதல்வர் தான். நாங்கள் உங்களுக்கு நண்பர்கள் என நீங்கள் சொன்னால் கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழையை தூக்கி போட்டீர்கள்.மனசாட்சி இல்லையா? அதனை நீங்கள் அறியாமல் பேசிவிட்டீர்களா. உண்மை என்ன என்பதை ஒத்துகொள்ளதான் வேண்டும்.மாதந்தோறும் மின் கட்டணம் அளவீடு செய்யபடும் என சொன்னீர்கள், செய்தீர்களா? நிறைய கிராமங்களுக்கு பஸ் வசதி கிடையாது முதல்வரிடம் ஒரு தங்கை கேள்விகேட்டார் எங்கள் ஊருக்கு ஒரு மினி பஸ் விடுங்கள் என, மலை கிராமங்களுக்கு பஸ் வசதியில்லை மருத்துவமனை வசதியில்லை வீட்டிலேயே இதனால் பிரசவம் பார்க்கும் ஆபத்து உள்ளது.தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெண்களே சொல்கின்றனர்.ஆனால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கொட்டிகிடப்பதாக கூறிவருகின்றனர் கேட்பவர்கள் என்ன கேசரியா சாப்பிடுகிறார்கள்.சட்டம் ஒழுங்கு காணாமல் போய்விட்டது முதல்வர் சட்டம் ஒழுங்கு குறித்து நான் பேசுவதாக சங்கடப்பட்டாராம்.நான் எப்படி அமைதியாக இருக்க முடியும். நானும் கேள்வி கேட்கிறோம் பதில் சொல்லவில்லை ஐந்து வருடமாக.ஆனால் பதில் சொல்லியே ஆகவே வேண்டும் தீய சக்திக்கு என்டுகார்டு போட வேண்டுமென்றால் அவர்களை சுவிட் ஆஃப் செய்ய வேண்டும்.வாக்குபதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்தை நீங்கள் அழுத்த வேண்டும் விசிலுக்கு வாக்களியுங்கள் உறுதியாக சத்தியமாக சொல்கிறேன் நமது ஆட்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பாக இருக்கும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும்.அரசு பள்ளிகளும் கல்லூரிகளும், முதல் தரத்தில் இருக்கும் போட்டி தேர்வுகளுக்கு கோச்சிங் செண்டர் செல்ல வேண்டியதில்லை.அரசு கல்லூரிகளின் தரம் போட்டி தேர்வுகளை சந்திக்கும் வகையில் அமைக்கப்படும் மாநில ஒன்றிய அரசு அலுவலகங்களை அனுகும் முறை குறித்து செயல்முறை பாடம் கற்பிக்கபடும்.ஒன்றிய அரசு கல்வி நிலையங்கள் சேர்க்கை குறித்து புரிதல் தெளிவு உருவாக்கபடும் அனைத்து அரசு பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கு சுத்தமான சுகாதாரமான மற்றும் தரமான கதவுகள் பொருத்தப்பட்ட கழிவறைகள் அமைக்கபடும்.
குடியாத்தம் வளத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பூட்டியே கிடப்பது ஏன்? பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கேள்வி?
தமிழ் நாடு தலைகுனியாது திமுகவின் மாபெரும் பொதுக்கூட்டம்!
வேலூர் கோட்டையை சுற்றுலா தலமாக்க வேண்டும்: வேலூர் மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.அசேன் கோரிக்கை!
1
…
10
11
12
…
32
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.