அணைக்கட்டு எம்எல்ஏவுக்கு பிரமாண்டமான வரவேற்பு! வேலூர், பிப். 27- அணையே இல்லாத அணைகட்டுக்கு அணைக்கட்ட சுமார் 173 கோடி ரூபாய் சட்டமன்றத்தில் பல முறை போராடி பெற்றுத் தந்து அதற்காக அணை கட்ட அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த திமுக வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் அணைக்கட்டு தொகுதி எம் எல் ஏ ஏ.பி.நந்தகுமாரை, மேற்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு தலைமையில் குதிரை வண்டியில் மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கை வெடிக்க மலர் மாலை அணிவித்து கிரீடம் சூட்டி ஊர்வலமாக அழைத்து வந்தார். இதில் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

புதிய பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா: எம்எல்ஏ பங்கேற்பு!வேலூர், பிப். 26-வேலூர் தெற்கு மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் அன்பூண்டி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் புதிய பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.விழாவில் வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்  கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் .இதில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், துணை செயலாளர் காசி, ஒன்றிய நிர்வாகிகள் திவாகர், பச்சையப்பன், ரகு ,ஸ்ரீரங்கம்மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.